| | | | | | | | | | | | | | | | | | |
விளையாட்டு Cricket

கோவில் பாப்பாகுடி ஏ.ஆர்., சிட்டியில் முத்தரப்பு பொங்கல் 'டி-10 கிரிக்கெட்'

by aadhavan on | 2026-01-18 11:01 PM

Share:


கோவில் பாப்பாகுடி ஏ.ஆர்., சிட்டியில் முத்தரப்பு பொங்கல் 'டி-10 கிரிக்கெட்'

முத்தரப்பு பொங்கல் 'டி-10 கிரிக்கெட்' போட்டியில் வெற்றி பெற்று, கோப்பை வென்ற சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியினர்..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை கோவில் பாப்பாகுடியில் 3 அணிகளுக்கு இடையிலான  முத்தரப்பு டி-10 கிரிக்கெட் போட்டி நடந்தது.

ஏ.ஆர்., சிட்டி மைதானத்தில் நடந்த போட்டியில் 3 அணி வீரர்கள் விளையாடினர். முதல் சுற்றில் கேப்டன் பங்கிராஜ் தலைமையிலான எலைட் 11 அணி வெளியேறியது. கேப்டன் பார்த்தசாரதி தலைமையிலான 'பவர் ஹவுஸ்' மற்றும் சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, பவர் ஹவுஸ் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோணை, ஏ.ஆர். சிட்டி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் துரைப்பாண்டி இணைந்து அணிக்கு 'அத்வி மீடியா' சூழல் கோப்பை வழங்கினர்.

கேப்டன் செந்தில் குமார், அணி வீரர்கள் சோணை, ஆதவன், சுவாமிநாதன், அருள், மணி, கோபால், சுரேஷ், பாலாஜி ஆகிய வீரர்களுக்கு தங்க பதக்கங்களும் வழங்கப்பட்டன. குமார் மெஸ் ராமச்சந்திரகுமார் சார்பில், முதல் பரிசு வென்ற அணிக்கு பரிசுத் தொகைக்கான கூப்பன் வழங்கப்பட்டது.





இரண்டு, மூன்றாம் இடம் பெற்ற அணி வீரர்களுக்கு வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டன. வீரர்கள் பாலாஜி 'மேன் ஆப் தி மேட்ச்', சுரேஷ் 'மேன் ஆப் தி சீரிஸ்' வென்றனர். கிரிக்கெட் வீரர் மனோஜ் நடுவராக இருந்தார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment