| | | | | | | | | | | | | | | | | | |
கல்வி கல்வி

பேராசிரியர்கள் தகுதியானவர்களாக இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி பகீர் குற்றச்சாட்டு...!

by Vignesh Perumal on | 2026-01-18 02:54 PM

Share:


பேராசிரியர்கள் தகுதியானவர்களாக இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி பகீர் குற்றச்சாட்டு...!

சென்னையில் நடைபெற்ற கல்வி மற்றும் தொழில்முனைவோர் தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தின் தற்போதைய கல்வித்தரம் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார்.

தமிழகத்தின் உயர்கல்வி, குறிப்பாகப் பொறியியல் கல்வியின் தரம் குறித்து ஆளுநர் மிகக் கடுமையான கருத்துக்களைப் பதிவு செய்தார்

தமிழகத்தில் உள்ள பல பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் அந்தப் பணிக்குத் தேவையான தகுதியுடனும், போதிய திறனுடனும் இல்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

பேராசிரியர்களே தகுதியற்றவர்களாக இருக்கும்போது, அவர்களால் எப்படித் தரமான பொறியாளர்களை உருவாக்க முடியும்? இதனால்தான் நம் நாட்டு மாணவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புத் திறன்கள் குறைவாக உள்ளன."

பள்ளிக்கல்வி முதல், உயர்கல்வி மற்றும் பிஎச்டி (PhD) ஆய்வுப் படிப்புகள் வரை அனைத்து நிலைகளிலும் கல்வியின் தரம் சமரசமின்றி உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழக அரசு 'முதலீட்டாளர்களின் சொர்க்கம்' எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் நிலையில், அதற்கு நேர்மாறான கருத்தை ஆளுநர் முன்வைத்தார்.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தற்போது பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் முதலீடுகளைக் கவர்வதில் வேகம் குறைந்துள்ளது.

தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்களின் வளர்ச்சியிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சிறு தொழில் முனைவோருக்கான சூழல் இங்கு சாதகமாக இல்லை."

தொழில்துறை வளர்ச்சி மந்தமடைவது மாநிலத்தின் எதிர்காலப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என அவர் எச்சரித்தார்.

ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கல்விக் கொள்கை (NEP) தொடர்பாக மோதல் நிலவி வரும் சூழலில், பேராசிரியர்களின் தகுதியைப் பற்றி அவர் பேசியிருப்பது எரியும் ஓயிரில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

இந்திய அளவில் உயர்கல்வியில் தமிழகம் முன்னிலையில் இருப்பதாகக் கல்வித்துறை அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், ஆளுநரின் விமர்சனம் அதற்கு நேரெதிராக உள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் லட்சக்கணக்கான கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அரசு கூறி வருவதை ஆளுநரின் கருத்து கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆளுநரின் இந்த உரைக்குத் தமிழக அமைச்சர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "ஆளுநர் அரசியல் உள்நோக்கத்துடன் மாநிலத்தின் பெருமையைக் குலைக்கப் பார்க்கிறார்" என ஆளுங்கட்சித் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.












நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment