| | | | | | | | | | | | | | | | | | |
சினிமா General

மீண்டும் திரையில்...! இன்று மாலை 6.02 மணிக்கு வெளியீடு..! ரசிகர்கள் உற்சாகம்..!

by Vignesh Perumal on | 2026-01-18 02:20 PM

Share:


மீண்டும் திரையில்...! இன்று மாலை 6.02 மணிக்கு வெளியீடு..! ரசிகர்கள் உற்சாகம்..!

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'தெறி'. இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, வரும் ஜனவரி 23, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.

மறுவெளியீட்டை முன்னிட்டு, இப்படத்தின் புத்தம் புதிய டிஜிட்டல் டிரெய்லர் இன்று (ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.02 மணிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

"தளபதி விஜய்யின் 'தெறி' ஆட்டம் மீண்டும் ஆரம்பம்! 10 ஆண்டு கால கொண்டாட்டமாக, பிரத்யேக டிரெய்லர் இன்று மாலை 6.02 மணிக்கு உங்கள் முன்..." எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படம் தற்போது மீண்டும் திரைக்கு வருவதற்குக் கூடுதல் முக்கியத்துவமும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

2016 ஏப்ரலில் வெளியான 'தெறி', விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான வசூல் சாதனைகளைப் படைத்தது. 10 ஆண்டுகள் நிறைவடைவதை ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

விஜய்யின் கடைசித் திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜன நாயகன்' திரைப்படம் தணிக்கைக் குழு தொடர்பான சிக்கல்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொங்கல் மற்றும் ஜனவரி மாத விடுமுறையில் விஜய்யைப் பார்க்கக் காத்திருந்த ரசிகர்களுக்கு மருந்தாக 'தெறி' மறுவெளியீடு செய்யப்படுகிறது.

ஜனவரி 23-ஆம் தேதி 'தெறி' வெளியாகும்போது, அதே நாளில் அஜித்தின் 'மங்காத்தா' (Mankatha) திரைப்படமும் மறுவெளியீடு செய்யப்படுவதால், திரையரங்குகள் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளன.


'தெறி' படத்தில் விஜய்யின் 'விஜய்குமார் ஐபிஎஸ்', 'ஜோசப் குருவில்லா',  என பரிமாணங்கள் மற்றும் சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா ஆகியோரின் நடிப்பு இப்போதும் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக ஜி.வி. பிரகாஷின் இசை மற்றும் பாடல்கள் மீண்டும் பெரிய திரையில் ஒலிக்கப் போவது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

இன்று மாலை 6.02 மணிக்கு வெளியாகும் டிரெய்லர், சமூக வலைதளங்களில் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment