by Vignesh Perumal on | 2026-01-05 10:20 AM
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (ஜனவரி 5, 2026) அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை முதன்முறையாக சவரன் ரூ.1,01,400-ஐ கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440 என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விலையை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளியின் விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.261-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளிக் கட்டி இன்று ரூ.2,61,000 என்ற விலையில் விற்பனையாகிறது.
உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் மத்திய வங்கிகளின் தங்க இருப்பு அதிகரிப்பு காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் வட்டி விகித மாற்றங்கள் தங்கம் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!