by admin on | 2025-03-15 10:40 AM
ஆண்டிபட்டி, மார்ச்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் மரிக்குண்டு ஊராட்சியில் உள்ள எரதிமக்காள்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பரமசிவம் வரவேற்றுப் பேசி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஊர் பெரியதனம் வேலு, நாட்டாமை நாகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் ,கல்வி மேலாண்மை குழு சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி. வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கரகம், கோலாட்டம், திருக்குறள் ஒப்புவித்தல், ஓரங்க நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவ ,மாணவிகள் பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !