| | | | | | | | | | | | | | | | | | |
கல்வி கல்வி

குழந்தைகளுடன் காத்திருக்கும் ஆசிரியை - கருணை காட்டுமா? தமிழக அரசு. !

by satheesh on | 2025-12-05 05:10 PM

Share:


குழந்தைகளுடன் காத்திருக்கும் ஆசிரியை - கருணை காட்டுமா?  தமிழக அரசு. !

திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒரு பகுதி நேர ஆசிரியை தனது சென்ற மாத சம்பளத்திற்காக குழந்தைகளுடன் காத்திருப்பு. அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத போதும் முழு சம்பளமான 10,000/-₹ பகுதி நேர ஆசிரியர்கள் வங்கி கணக்கில் தாமதமின்றி வரவு வைக்கப்பட்டது.  ஆட்சி மாறியதும் திமுக ஆட்சிக்கு வந்து பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதிகளை எதிர்பார்த்து ஏமாந்தது மட்டுமின்றி சிலர்  பணி நிரந்தர நீக்கம் செய்யப்பட்டு பணி  இழக்கவும் செய்தனர். மேலும் சம்பளம் சரிவர கிடைப்பதில்லை என பகுதி நேர ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து நாலரை வருங்களில் வெறும் 2,500/-₹ மட்டுமே சம்பள உயர்வாக பெற்றனர்.  அதுவும் சம்பளம் மாதாமாதம் இரு தவணைகளாக பத்தாயிரம் ரூபாய் ஒரு தடவையும் மீதி 2,500/-₹ இரண்டாவதாகவும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளமாக தருகிறார்கள்.இதில் திமுக அரசு உயர்த்திய சம்பளத்தொகையான 2,500/-₹ பகுதி நேர ஆசிரியர்களுக்கு சரியாக கிடைப்பதில்லையாம்.  அதனை பெற பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்தோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தவமாய் தவமிருந்து பசி பட்டிணியுமாக குடியும் குட்டிகளுடன் காத்திருக்க வேண்டியுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பகுதி நேர ஆசிரியருக்கு சென்ற ஆகஸ்ட் மாதம் எட்டு நாட்கள் சம்பளத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே சம்பளம் வழங்கியுள்ளனர். இன்றுவரை மீதி சம்பளம் வழங்கவே இல்லை. பொதுவாக பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் பனிரெண்டு அரை நாட்கள் அதாவது வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி புரிய வேண்டும்.அதே நேரம் பனிரெண்டு அரை நாட்கள் பணி புரிய வழி இல்லாத போது தினமும் முழு நாட்கள் அதாவது ஆறு மணி நேரம் பணி புரிந்து அந்த பனிரெண்டு நாட்களை ஈடு செய்து முழு சம்பளம் குறையாமல் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். அந்த மாதம் ஈடு செய்ய முடியாத வேலை நாட்களை அடுத்த மாதங்களில் ஈடு செய்யலாம் அல்லது தினம் ஒன்பது மணி நேரம் பணி புரிந்து மூன்று அரை நாட்களாக கணக்கிட்டு சம்பளம் வழங்க வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் பணி ஆணையிலேயே சொல்லப்பட்டுள்ளது. ஆனால்....நடப்பதோ வேறு.இதை இந்த ஊடகங்களும் வெளியிடுவதில் என குற்றச்சாட்டை வைக்கிறார். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செயவோம் என்ற தமிழக முதல்வர் பகுதி நேர ஆசிரியர்களை சந்திக்க மறுப்பதாக தகவல்.  முதல்வரை பகுதி நேர ஆசிரியர்கள் சந்திக்க ஊடகங்கள் உதவுமா என எதிர்பார்க்கிறார்கள்.அல்லது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது என முதல்வர் வாயால் சொல்ல வைக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்  ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment