| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

திருப்பரங்குன்றம் விவகாரம்....! நீதிபதிகள் கடும் எச்சரிக்கை...!

by Vignesh Perumal on | 2025-12-05 04:21 PM

Share:


திருப்பரங்குன்றம் விவகாரம்....! நீதிபதிகள்  கடும் எச்சரிக்கை...!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நிலவிய சர்ச்சைகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதிகள் இன்று (டிசம்பர் 5, 2025) கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ஆர். ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் கருத்துக்கள் குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களைப் பகிரக் கூடாது. மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தின் மாண்பைக் கடைபிடிக்கும் வகையில் பொதுவெளியில் பேச வேண்டும். உத்தரவுகள் பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

முன்னதாக, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்ற உத்தரவிட்டதும், அதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ததும், சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் செல்ல முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் இரு சமூகப் பிரிவினர் இடையே பதற்றத்தை உருவாக்கியது.

இந்தச் சூழலில், நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றுவதுடன், நீதிமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் வகையிலான எந்தவொரு கருத்தையும் பொதுவெளியில் பேசுவதையோ அல்லது சமூக வலைதளங்களில் பகிர்வதையோ மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் தவிர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் திட்டவட்டமாக எச்சரித்துள்ளனர்.












ஆசிரியர்கள் குழு.....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment