| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் HINDUISM

விருதுநகரில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது...!!?

by admin on | 2025-12-04 09:43 AM

Share:


விருதுநகரில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது...!!?

திருக்கார்த்திகையை  முன்னிட்டு விருதுநகர் அருள்மிகு சொக்கநாத சுவாமி திருக்கோயிலில் இரவு  சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. 


விருதுநகர் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு சொக்கநாத சுவாமி திருக்கோவிலில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சொக்கப்பனை கொளுத்துவது என்பது பழங்காலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழாவாகும் சிவபெருமான் பிரம்மன் மற்றும் விஷ்ணுவுக்கு அடிமுடி தெரியாதவாறு காட்சியளித்ததை நினைவு கூறும் வகையில் இது ஏற்றப்படுவதாக நம்பப்படுகிறது.  காய்ந்த பனை ஓலைகளைக் கொண்டு கோபுர வடிவில் உருவாக்கப்பட்டு எரிக்கும் போது தோன்றும் ஜோதியை தரிசிப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.



சொக்கப்பனை எரிந்த பின் கிடைக்கும் சாம்பல் பயிர்களில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுகிறது. இதனால் பயிர்கள் பாதுகாக்கப் படுகின்றன. இன்றைய சொக்கப்பனை கொடுத்ததை முன்னிட்டு சொக்கநாத சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன், நந்தி தேவன் வாகனத்தில் சொக்கநாத சுவாமி பிரியாவிடை அம்மனுடன் மற்றும் மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.  தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


செய்தியாளர் கே எஸ் ராஜேந்திரன் விருதுநகர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment