by ravikumar on | 2025-11-14 02:37 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் A. வாடிப்பட்டியில் நாளை 15 11 2025 அன்று வைகை ஸ்கேன் மற்றும் திரவியம் கல்விக் குழுமம் நிறுவனர் மருத்துவர். T பாண்டியராஜ் அவர்கள் இலவச மருத்துவ முகாம் நடத்துகிறார். இதில் மூன்று சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொள்கிறார்கள்.மேலும் இச்சிறப்பு மருத்துவ முகாமில் சிறுநீரகம், குடல்,கல்லீரல் , மண்ணீரல் போன்ற உறுப்புகளுக்கு இலவசமாக ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு ஆரம்ப நிலையில் உள்ள நோய்களை கண்டறிந்து அதற்கான மருத்துவமும், ஆலோசனையும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு முன் பல்வேறு மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்று வந்துள்ளனர்.
T.muthukamachi evidence editor 9842337244
முதன்மை செய்தியாளர் ரவிக்குமார்