| | | | | | | | | | | | | | | | | | |
வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

by Vignesh Perumal on | 2025-10-22 04:15 PM

Share:


TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பட்ட குரூப்-4 (Group-IV) தேர்வு முடிவுகள் இன்று (அக்டோபர் 22, 2025) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

ஜூலை 12, 2025 அன்று நடைபெற்ற இத்தேர்வுக்கான முடிவுகளைத் தேர்வர்கள் தற்போது தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் தேர்வு கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (Assistant) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது.

தேர்வாணையத்தின் அறிவிப்பின்படி, மொத்தம் 4,662 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற்றது. 

இத்தேர்வை சுமார் 11 லட்சம் தேர்வர்கள் இந்தக் குரூப்-4 தேர்வை எழுதினர்.

தேர்வில் பங்கேற்றவர்கள், தங்களது முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ tnpsc.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாகச் சரிபார்க்கலாம்.

தேர்வர்கள் தங்களது பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாகச் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மற்றும் கலந்தாய்வு (Counseling) குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 







நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment