by admin on | 2025-03-11 08:08 PM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள உப்புத்துறை மலை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் இறந்தவர்களை எடுத்து செல்ல பயன்படுத்தி வந்த பாதையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலரால் அடைக்கப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் அறிந்து வட்டாட்சியர் சம்பந்தமாக உப்புத்துறை மலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தியாளர் - பா.விக்னேஷ்பெருமாள்