by Vignesh Perumal on | 2025-08-11 08:23 PM
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2025-க்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 (TNTET 2025)க்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
விருப்பமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், www.trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும், தேர்வுத் தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், தாள் 1 (Paper I) நவம்பர் 1, 2025 மற்றும் தாள் 2 (Paper II) நவம்பர் 2, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வானது அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் (தாள் 1) மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (தாள் 2) பணியிடங்களுக்கான தகுதியை நிர்ணயம் செய்யும். இந்த அறிவிப்பு, ஆசிரியப் பணிக்குத் தயாராகும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியாகும்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்