| | | | | | | | | | | | | | | | | | |
மருத்துவம் சுகாதாரம்

பல் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்

by yogabalajee on | 2025-08-11 08:47 AM

Share:


பல் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி நாசுவிவி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1987-1994 ம் ஆண்டு படித்த மாணவர்களின், சங்கமம் அறக்கட்டளை மற்றும் திண்டுக்கல் ஸ்ரீ வேதா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பல் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் இன்று 10-08-2025, ஆத்தூர் வட்டம் சித்தரேவு VPKM மஹாலில் நடைபெற்றது. இரத்த அழுத்தம் சர்க்கரை மற்றும் பொதுநல மருத்துவம் மற்றும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனைகளின் படி மருத்துவம் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. சிறப்பு மருத்துவர்கள் மரு.B.சௌமியா ரெங்கன், மரு.T.விசாலினி, மரு.B ஸ்ரீதரன் ஆகிய சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையின் படி மிகச் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் அடைந்தனர். மருத்துவ முகாமினை சங்கமம் அறக்கட்டளை தலைவர் மணிகண்டன் செயலாளர் பாலகிருஷ்ணன் பொருளாளர் சிவனேசன் மற்றும் சங்கமம் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment