| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் ADMK

தீரன் சின்னமலை நினைவு தினம்...! அதிமுக மரியாதை...!

by Vignesh Perumal on | 2025-08-03 11:13 AM

Share:


தீரன் சின்னமலை நினைவு தினம்...!  அதிமுக மரியாதை...!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 3, 2025) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பரப்புரை சுற்றுப்பயணத்திற்காக நெல்லைக்கு வந்துள்ள எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தீரன் சின்னமலையின் தியாகங்களை நினைவுகூரும் வகையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் நெல்லையில் பெரும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.





நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment