by Vignesh Perumal on | 2025-08-03 11:02 AM
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-வது நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 3, 2025) அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை, கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்த தீரன் சின்னமலையின் தியாகங்களைப் போற்றும் விதமாக இந்த மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்த நினைவு நாள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்