by Vignesh Perumal on | 2025-08-02 11:02 AM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகையைத் திருடிய வழக்கில், வீட்டின் உரிமையாளரின் உறவினரான விக்னேஷ் (37) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொடைக்கானல் அண்ணா நகரைச் சேர்ந்த கணேசன் என்பவர் வீட்டில் கடந்த 17-ஆம் தேதி பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் 7 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றார். இது குறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில், கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தீவிர விசாரணையில், கணேசனின் உறவினரான விக்னேஷ் என்பவர் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், திருடப்பட்ட நகைகளை அவர் ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, விக்னேஷைக் கைது செய்த காவல்துறையினர், அடகு நிறுவனத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினரே கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்