| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் திருப்பூர்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழப்பு...! இரு வனத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்....!

by Vignesh Perumal on | 2025-08-02 10:29 AM

Share:


விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழப்பு...! இரு வனத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்....!

வனத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாரிமுத்து என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச் சரக வனவர் நிமல் மற்றும் வனக் காவலர் செந்தில்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 55) என்பவர், வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, உடுமலை வனத்துறையினர் அவரை விசாரணைக்காக வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாரிமுத்து திடீரென மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மாரிமுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கடமையில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, வனவர் நிமல் மற்றும் வனக் காவலர் செந்தில்குமார் ஆகியோரை தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.





நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment