| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

தேனி அரசு விதை பண்ணையில் முறைகேடு..?? அலுவலரின் கணவர் தலையீடு...!!!

by admin on | 2025-07-06 06:53 PM

Share:


தேனி அரசு விதை பண்ணையில் முறைகேடு..?? அலுவலரின் கணவர் தலையீடு...!!!

தேனி மாவட்டம், கூடலூர் தாமரைக்குளம் பகுதியில் உள்ள அரசு விதைப்பண்ணையில் அரசு விதிமுறைகளை மீறி பணிகள் நடைபெற்று வருவதாகவும், வேளாண்மை அலுவலரின் கணவரே பணியில் தலையிடுவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.



கூடலூர் தாமரைக்குளம் பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரசு விதைப்பண்ணையில், வரப்பு வெட்டுதல், உழவு, நடவு, களை எடுத்தல், களவன் பார்ப்பது, அறுவடை, நெல் உலர்த்துதல், விதை சுத்திகரிப்பு உள்ளிட்ட அனைத்து வேலைகளும் வழக்கமாக பகிரங்க கூலி காண்டாக்ட் - ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) மூலம் மட்டுமே வெளிப்படையாக ஒப்படைக்கப்பட வேண்டும். இதுவே அரசு விதிமுறை.ஆனால், தற்போது இந்தப் பணிகள் முறையாக டெண்டர் அறிவிக்கப்படாமல், விவசாய அலுவலர் ராஜேஸ்வரி தனது விருப்பப்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுவதுடன், வெளிப்படைத்தன்மை மீறப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த முறைகேடுகளில் அலுவலகப் பொறுப்பிலோ, பணியிலோ எவ்விதத் தொடர்பும் இல்லாத வேளாண்மை அலுவலர் ராஜேஸ்வரியின் கணவர் ஆதி ராமன் நேரடியாகத் தலையிட்டுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.


இது தொடர்பான ஒரு புகைப்பட ஆதாரமும் வெளியாகி சர்ச்சையை வலுப்படுத்தியுள்ளது. கூடலூர் அரசு விதைப்பண்ணை அலுவலகத்தில் உள்ள விவசாய அலுவலரின் இருக்கையில் அரைக்கால் டவுசருடன் ஆதி ராமன் அமர்ந்திருக்கும் காட்சியும், அவருக்கு அருகே வேளாண்மை அலுவலர் ராஜேஸ்வரி ஒரு ஓரமாக சேரில் அமர்ந்திருப்பதும் அந்தப் புகைப்படத்தில் தெரிகிறது. இது, அவரது கணவர் அலுவலகப் பணிகளில் நேரடியாகத் தலையிடுவதற்கு ஒரு சான்றாகக் காட்டப்படுகிறது.

அரசு விதைப்பண்ணையில் நடைபெறும் இந்த முறைகேடுகளை உடனடியாகக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். வேளாண்மை அலுவலரின் கணவர் அரசுப் பணிகளில் தலையிடுவது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தேனி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இது குறித்து வேளாண்மை துறை பொறுப்பு அதிகாரி மகேந்திரிடம்  9865704757 என்று எண்ணில் போனில் அழைத்து கேட்டபோது நேரில் வாருங்கள் இதுகுறித்து தகவல் கூறுகிறேன் என்று கூறினார். மேலும் அங்கு பணி செய்கின்ற பணியாளர்களைவேலை செய்யுங்கள் என்று கூறினால் இது போன்ற தவறான தகவலை பரப்புகிறார்கள் என்றும் கூறினார்.

நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment