by Satheesh on | 2025-07-06 04:19 PM
தேனி: பெரியகுளம் எல். ஐ. சி கிளை அலுவலகத்தில் முன்பு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 75-வது பிறந்தநாள் விழா மற்றும் Aiiea பவள விழா தொடக்கமும் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் மூத்த உறுப்பினர் அப்பன்ராஜ் அவர்கள் சங்க கொடியினை ஏற்றினார். கிளைச் செயலாளர் சசிகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கிளைத் தலைவர் நாகபாண்டி பவள விழா உறுதி மொழி வாசிக்க அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டனர்.
பெரியகுளம் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் மேலும் ஜூலை 12.07.2025 மற்றும் 13.07.2025 அன்று 69-வது கோட்டச் சங்க மாநாடு பெரியகுளம் வடுகா நாயுடு மஹாலில் நடைபெறுவதை ஒட்டி வருகின்ற ஜுலை 04.07.2025 மற்றும் 05.07.2025 இரண்டு நாட்கள் பெரியகுளம், வடுகபட்டி, தேவதானப்பட்டி, தாமரைக்குளம், லட்சுமிபுரம், தேனி, அல்லிநகரம், போடி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர்,கன்டமனூர், ஆண்டிபட்டி, அனைத்து இடங்களிலும் "வலுவான எல். ஐ. சி " - " வலிமையான இந்தியா " மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. கிளைப் பொறுப்பாளர் சரவணக்குமார் நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தேனி: பெரியகுளத்தில் மதுரை கோட்ட காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் 69 ஆவது மாநாடு நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை எல்ஐசி ஊழியர்கள் நடத்தி வருகிறார்கள். பெரியகுளத்தில் இந்தியாவிற்கான மக்கள் இயக்கத் தலைவர் அன்புக்கரசன் இந்த பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்தார். கிளைச் சங்கத் தலைவர் நாகபாண்டி தலைமையில், சரவணக்குமார் வரவேற்புரை நிகழ்த்த, கோட்டச்சங்க தலைவர் சுரேஷ்குமார் உரையாற்றினார். பெரியகுளம் கிளை மேலாளர் முத்துசாமி, வளர்ச்சி அதிகாரிகள் சங்கத் தலைவர் மோகன்ராம் மற்றும் C P I M மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினர். பெரியகுளம் நகரைச் சேர்ந்த 30க்கும் அதிகமான L I C முகவர்கள் இணைச் செயலாளர் ரமேஷ்பாண்டியன் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டனர். L I C ஊழியர்களின் சுடர் கலைக்கழுவின் தப்பாட்டம், பாடல்கள், வீதி நாடகம் நடைபெற்றது. வரவேற்பு குழு செயலாளர் சசிகுமார் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து வடுகபட்டி, ஜெயமங்கலம், தேவதானப்பட்டியில் பிரச்சாரம், முகவர்கள் கெளரவிப்பு நடைபெற்றது.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.