கம்பத்தில் இலவச காது மூக்கு தொண்டை மருத்துவ முகாம்
by aadhavan on |
2025-07-01 06:44 PM
Share:
Link copied to clipboard!
மருத்துவ முகாம் நடத்திய மருத்துவ குழுவினர் மற்றும் ஏற்பாட்டாளர்கள்
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற காது மூக்கு தொண்டை மருத்துவ முகாமில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை, கம்பம் ப்ளஸ்ஆல் அறக்கட்டளை மற்றும் கம்பம் ரஞ்சித் மஹால் இணைந்து இம்முகாமை நடத்தினர். மருத்துவமனை தலைமை அதிகாரி ராமச்சந்திரன், மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், குருதேவ் தலைமையிலான குழுவினர் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் செய்தனர்.
முகாமில் சிறுவர், பெரியவர், முதியோர் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இலவசமாக பரிசோதனைகள் செய்ததோடு, மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
முகாமில் அன்பு ரஞ்சித் குமார், ப்ளஸ்ஆல் அறக்கட்டளை சேர்மன் ஏ.கே.பார்த்திபன், தர்ஷினி, ஏ.குபேந்திரன், கம்பம் அரிமா சங்க பொருளாளர் அன்னக்கொடி மற்றும் அறக்கட்டளை ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.