by admin on | 2025-02-12 09:50 AM
கேரளா மாநிலம் கொல்லம், குளத்துப்புழா, கண்டன்சிரா எஸ்டேட் அருகே ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட எண்ணெய் பனை தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
மூன்றுதோட்டத் தொழிலாளர்கள் புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குளத்துப்புழா மற்றும் புனலூர் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர், ஒரு பகுதி ஏற்கனவே அணைக்கப்பட்டுள்ளது.
கோடை வெப்பத்தில் வறண்ட புதர் நிலத்தில் தீப்பிடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். புதிதாக நடப்பட்ட ஆயிரக்கணக்கான எண்ணெய் பனை மரங்கள் அழிக்கப்பட்டன. அந்தப் பகுதி மக்கள் வசிக்காத பகுதி பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர் பாஸ்கரன் தேனி.