| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் Spiritual

'மதுரையில் பண்டரி', நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி தொடக்கம்.. முதல் முறையாக மதுரையில் நடக்கிறது!

by aadhavan on | 2025-05-28 10:34 AM

Share:


'மதுரையில் பண்டரி', நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி தொடக்கம்.. முதல் முறையாக மதுரையில் நடக்கிறது!

 » மு. ஆதவன்

மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கில், 'மதுரையில் பண்டரி' நிகழ்வு சண்டி ஹோமத்துடன் தொடங்கியது.

சென்னை பகவந் நாம பிரச்சார மண்டலி நிறுவனத் தலைவர் கடலூர் கோபி பாகவதர், மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடக்கிறது.

மருதாநல்லூர் சத்குரு ஸ்ரீ கோதண்டராம சுவாமிகள், பிலாஸ்பூர் ஸ்ரீசச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள், விசாகப்பட்டினம் சௌபாக்கிய புவனேஸ்வரி பீடம் ராமானந்த பாரதி மகாசுவாமிகள் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தனர். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பல துறவிகள், பாகவதர்கள், பக்தர்கள் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன், ருக்மணி கோயில் போன்ற அமைப்பில், நாம சங்கீர்த்தனத்துடன், 'மதுரையில் பண்டரி' நிகழ்வு, ஜூன்.1 வரை நடக்கிறது. ரிஷிகேஷ், பத்ராச்சலம், அயோத்தி, பூரி, உடுப்பி, துவராகா, மதுரா உட்பட பல தலங்களைத் தொடர்ந்து, முதல் முறையாக மதுரையில் நடக்கிறது. 

மீனாட்சி திருக்கல்யாணம், 108 கன்னியா பூஜை, சுமங்கலி பூஜையோடு விசேஷ சாளக்கிராம பூஜையும் நடந்தது.

தினமும் பாகவத இசையோடு பகவான் நாம சங்கீர்த்தனமும் நடக்க இருக்கிறது. இதில், நாடு முழுவதும் இருந்து, பிரபலமான 100 நாம சங்கீர்த்தன கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 

நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, 1008 சாளக்கிராமங்களை வைத்து பூஜை செய்து, அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. வேத பாராயணம், ருத்ர பாராயணம், ஸஹஸ்ரநாம பாராயணங்களும் நடந்தன.

பண்டரிபுரம், பாண்டுரங்கன் ருக்மணி கோயில போலவே செட் அமைத்து தினமும் அந்தக் கோயிலில் நடைபெறுவதைப் போலவே பூஜைகள் நடக்க உள்ளன. பண்டரிபுரம் கோயிலில் பூஜை செய்யும் பூஜகர்களே, இங்கும் அதே முறையில் பூஜைகள் செய்ய இருக்கிறார்கள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment