by Vignesh Perumal on | 2025-05-12 11:45 AM
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் பனிக்கன்குடி கொம்பு ஒடிஞ்சான் பகுதியில் இன்று (மே 12) காலை நிகழ்ந்துள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் சுபா மற்றும் அவரது தாயார் ஆவர். மேலும், சுபாவின் இரண்டு குழந்தைகளும் இந்த கோர விபத்தில் உயிரிழந்தனர்.
வீடு தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து பனிக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்திற்கான சரியான காரணம் தடயவியல் நிபுணர்களின் அறிக்கை மற்றும் முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.
இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!