by Vignesh Perumal on | 2025-05-12 11:18 AM
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஹெச்டி சேர்க்கைக்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வான நெட் (NET - National Eligibility Test) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA - National Testing Agency) ஆண்டுக்கு இருமுறை - ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் - கணினி வழியில் நடத்தி வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கான நெட் தேர்வின் முதல்கட்டத் தேர்வுகள் வரும் ஜூன் 21 முதல் 30 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளப் பதிவு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கியது.
விண்ணப்பிக்க இன்று, மே 12 ஆம் தேதியே கடைசி நாளாகும். எனவே, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனடியாக ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசி நாள் நாளை, மே 13 ஆம் தேதி ஆகும்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால், மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
நெட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம், பாடத்திட்டம் மற்றும் தேர்வு தொடர்பான மேலும் விரிவான தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் 011 69227700 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை (NTA) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இன்று இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!