by Vignesh Perumal on | 2025-05-12 09:31 AM
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் நேற்று (மே 11, 2025) திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி திமுக சார்பில் "நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு" என்ற தலைப்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை விளக்கிப் பேசினர். குறிப்பாக, பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் திமுக அரசின் சாதனை விளக்க கையேடு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் மாநகர பொருளாளர் சரவணன் ஆகியோர் இந்த கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். திமுக அரசின் சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கையேடு வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!