by Vignesh Perumal on | 2025-05-11 07:16 PM
தேனி மாவட்டம் உப்பார்ப்பட்டி – தப்புக் குண்டு சாலையில் அமைந்துள்ள தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் இன்று (மே 11, 2025) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது.
தப்புக்குண்டு மற்றும் உப்பாரப்பட்டி ஆகிய இரு பகுதிகளையும் இணைக்கும் சாலையில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்துள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தேனி தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குப்பைகள் அதிக அளவில் குவிந்துள்ளதால் தீயை முழுமையாக அணைக்க சில மணி நேரம் ஆகலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகைமூட்டம் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் அடைந்துள்ளனர். மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் புகையின் காரணமாக மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!