by Vignesh Perumal on | 2025-05-11 07:04 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை ஆறுமுகம் பிள்ளை தெருச்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சாலையின் பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகியுள்ளதால், வாகனங்களை இயக்குவது மிகவும் சிரமமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இப்பள்ளங்களில் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், வாகனங்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆகவே, பெரியகுளம் தென்கரை ஆறுமுகம் பிள்ளை தெருச்சாலையை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!