| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து...! அச்சத்தில் ஊழியர்கள்...!

by Vignesh Perumal on | 2025-05-11 06:52 PM

Share:


டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து...! அச்சத்தில் ஊழியர்கள்...!

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இன்று (மே 11, 2025) அதிகாலை டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா லிமிடெட் (NLC India Limited) இயங்கி வருகிறது. இங்குள்ள அனல் மின் நிலையத்தின் விரிவாக்கப் பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் டிரான்ஸ்பார்மர் மற்றும் அதனுடன் இணைந்திருந்த காப்பர் கம்பிகள் உள்ளிட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் புகை மூட்டம் நிலவியதுடன், பதற்றமான சூழலும் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து என்எல்சி உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment