by Vignesh Perumal on | 2025-05-11 06:41 PM
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று (மே 11, 2025), இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலாளர் மாணிக்கவாசகம் ஐ.ஏ.எஸ். அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் முக்கிய நோக்கம், புகழ்பெற்ற தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலின் சிற்பக் கலை மற்றும் கட்டமைப்பு சிறப்புகளை யுனெஸ்கோ அங்கீகாரத்திற்காக மதிப்பீடு செய்வதாகும். கோவிலின் கலைநயம் மிக்க தூண்கள், மண்டபங்கள் மற்றும் இதர சிற்பங்களை அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ்பாலாஜி மற்றும் கோவில் அதிகாரிகள் உடனிருந்தனர். அவர்கள் கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து செயலாளருக்கு விளக்கமளித்தனர்.
யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் இந்த ஆய்வின்போது விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!