| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

மாபெரும் அன்னதானம்...! சினி துறையினர் பங்கேற்பு...!

by Vignesh Perumal on | 2025-05-11 05:05 PM

Share:


மாபெரும் அன்னதானம்...! சினி துறையினர் பங்கேற்பு...!

மதுரை கள்ளழகர் திருவிழாவை முன்னிட்டு டி.ஆர்.ஓ காலனி பகுதியில் "அன்னதானம்" நிகழ்ச்சி நடைபெற்றது. ராகவி சினி ஆர்ட்ஸ் மற்றும் லியானா குரூப்ஸ் இணைந்து இந்த அன்னதானத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஷாஜஹான், எஸ்.டி.சுப்பிரமணியன், முருகன் அப்பா பாலாஜி ஆகியோரின் நல்லாசியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமை தாங்கினார்.

மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டும், நடிகையுமான வைத்தீஸ்வரி (எ) பிரியா முன்னின்று 501 நபர்களுக்கு லட்டு, புளியோதரை மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மீசை மனோகரன், மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், செந்தில் நாதன், ஜெயகாமன், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டும், நடிகையுமான அங்கிதா, பாக்ய லட்சுமி உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர்.


அன்னதானத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு கள்ளழகர் திருவிழாவின் பக்திப்பூர்வமான சூழலில் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment