| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

தாக்குதலில் சிக்கிய தமிழ்நாட்டு மருத்துவர்...! பிரதிநிதி சந்திப்பு....!

by Vignesh Perumal on | 2025-05-11 02:10 PM

Share:


தாக்குதலில் சிக்கிய தமிழ்நாட்டு மருத்துவர்...! பிரதிநிதி சந்திப்பு....!

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரனை தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் நேற்று (மே 10, 2025) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மருத்துவர் பரமேஸ்வரனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏ.கே.எஸ். விஜயன் மருத்துவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததுடன், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.

பஹல்காமில் சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மருத்துவர் பரமேஸ்வரன் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment