by Vignesh Perumal on | 2025-05-11 11:52 AM
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தில் 107 கிராம் மாயமாகியுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட பொக்கிஷங்கள் நிறைந்த இக்கோயிலுக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது கோயிலின் கதவுகளில் தங்கத் தகடுகள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று பாதுகாப்பு அறையில் உள்ள தங்கத்தை கணக்கிட்டபோது, அதில் 107 கிராம் தங்கம் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு மிகுந்த அறையில் தங்கம் மாயமானது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாயமான தங்கம் கதவுகளில் பதிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பத்மநாபசுவாமி கோயிலில் இதற்கு முன்பும் பலமுறை தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மாயமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஒரு தங்கம் மாயமான சம்பவம் கோயிலின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!