by Vignesh Perumal on | 2025-05-11 11:30 AM
சென்னையை அடுத்த மறைமலை நகரில் நேற்று (மே 10) இரவு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையுண்டவர்கள் விமல் (வயது 22) மற்றும் ஜெகன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், மறைமலை நகர் பகுதியில் நேற்று இரவு சில நண்பர்கள் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இந்த மோதலில் ஆத்திரமடைந்த சிலர் விமல் மற்றும் ஜெகனை கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மறைமலை நகர் காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வலைவீச்சு நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நண்பர்களுக்குள் ஏற்பட்ட இந்த பயங்கர கொலை சம்பவம் மறைமலை நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றப் பின்னணி கொண்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!