| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் ADMK

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்...! மருத்துவ முகாம்...!

by Vignesh Perumal on | 2025-05-11 11:22 AM

Share:


எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்...! மருத்துவ முகாம்...!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பி.பரமசிவம் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில், கழக அமைப்புச் செயலாளர் மருதராஜ், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் தென்னம்பட்டி பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜான் போஸ், பழனியம்மாள், லட்சுமணன், தண்டாயுதம், மலர்வண்ணன், பெருமாள், நகர செயலாளர்கள் பாபுசேட், அறிவாளி, பி.டி.ஆர்.பாலசுப்ரமணியம், மணிமாறன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், ரத்ததான முகாமும் நடைபெற்றது.


பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த மருத்துவ முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment