| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பழங்குடியினர் கிராமத்திற்கு உதவிய திமுக..! குவியும் பாராட்டுக்கள்...!

by Vignesh Perumal on | 2025-05-11 10:29 AM

Share:


பழங்குடியினர் கிராமத்திற்கு உதவிய திமுக..! குவியும் பாராட்டுக்கள்...!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், கே.சி.பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குறவனாட்சி ஓடை பழங்குடியினர் கிராமத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், வீடுகளுக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த சிரமத்தை அறிந்த திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஏ.சி.ஐயப்பன் மற்றும் கே.சி.பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சி.மாரிமுத்து ஆகியோர் உடனடியாக களத்தில் இறங்கினர். ஜேசிபி இயந்திரம் மூலம் குறவனாட்சி ஓடை கிராமத்திற்கு வாகனங்கள் செல்லும் வகையில் புதிய பாதை அமைத்து கொடுத்தனர்.

இதனால், கட்டுமானப் பொருட்களை எளிதாக வீடுகளுக்கு கொண்டு செல்ல முடிந்தது. தங்களது சிரமத்தை போக்கிய திமுக நிர்வாகிகளுக்கு குறவனாட்சி ஓடை பழங்குடியினர் கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து பழங்குடியினர் கிராம மக்கள் கூறுகையில், “வீடுகள் கட்டும் பணிக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல பாதை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டோம். திமுக நிர்வாகிகள் உடனடியாக உதவி செய்து, புதிய பாதை அமைத்து கொடுத்ததால் தற்போது எங்களது சிரமம் நீங்கியுள்ளது. அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment