by Vignesh Perumal on | 2025-05-10 02:15 PM
திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பழநி கோட்ட மின் பயனீட்டாளர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் குறைதீர்ப்பு முகாம் எதிர்வரும் 13.05.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என்று செயற்பொறியாளர் பொறிஞர்.கொ.தி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த குறைதீர்ப்பு முகாமில், திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான புகார்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக செவிமடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.
எனவே, பழநி கோட்டத்தைச் சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது மின்வாரியம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!