by Vignesh Perumal on | 2025-05-10 11:40 AM
நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக தொண்டர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில், "நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்றால், இனி வரும் காலங்களில் அதிமுக கட்சியும் தொண்டர்களும் அழிந்து நெல்லையில் அதிமுக இல்லை என்ற நிலை ஏற்படும். எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளையும் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், "அதிமுக தொண்டர்கள் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம். எங்களது கோரிக்கையை ஏற்று, நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும்" என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
வாக்கு எண்ணிக்கை ! வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் !!
அதிகரிக்கும் ஐஸ்கிரீம் விற்பனை ! நிறுவனங்களில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு.!!
பழனியில்....! ஆண்டிபட்டி தொழிலாளி அடித்துக் கொலை...! 3 பேர் கைது...!
சாத்தான்குளம் கொலை வழக்கு : சிபிஐ முறையீடு ! கோர்ட் உத்தரவு !!
10 மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...! புதிய அறிவிப்பு வெளியீடு...!