by aadhavan on | 2026-02-26 03:45 PM
போட்டியில் பரிசு பெற்ற பிரத்யுஷா பொறியியல் கல்லூரி மாணவர்கள்..
» மு. ஆதவன்
சென்னையில் நடைபெற்ற, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான ஆகாய விமானம் தயாரித்து பறக்க விடும் போட்டியில், கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
காரப்பாக்கம் கே.சி.ஜி., கல்லூரியில், பொறியியல் கல்லூரி மாணவர்கள் தாங்களாகவே ஆகாய விமானம் தயாரித்து பறக்க விடும் போட்டி நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து 80 கல்லூரிகளில் படிக்கும் மாணவர் குழுவினர் பங்கேற்றனர்.
ஆகாய விமானத்தை தயாரித்த விதம், அதற்கு பயன்படுத்திய தொழில் நுட்ப உபகரணங்கள், அதன் இயங்குதூரம், இயங்கிய விதம் மற்றும் மாணவர்கள் அதனை இயக்கிய விதம் என பல்வேறு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், திருவள்ளூர் பிரத்யுஷா கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று, இரண்டாம் இடம் பிடித்தனர்.
திட்டத் தலைமை பேராசிரியர் கோபிநாத் மற்றும் சந்தோஷ், சஞ்சய் ராம், சுனில், தென்றல், ரியாஸ் முஹமத், சர்வேஷ், கோபி கிருஷ்ணன், ஹரிஹரன், பிரதீப் ஆகிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் தாளாளர் முதல்வர் மற்றும் நிர்வாகிகள் பரிசு பெற்றவரை பாராட்டி கௌரவம் செய்தனர்.
அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..! வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக முருகானந்தம் நியமனம்..!
அதிர்ச்சி முடிவு...! எம்.எல்.ஏ காமராஜ் கட்சியிலிருந்து நீக்கம்...! டி.டி.வி. தினகரன் அதிரடி...!
புகையிலை பொருட்கள் அழிப்பு....!!!"
டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு..! இரு வாரங்களில் அமல்...!
இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி..! பரிதாப பலி...!