| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் திருப்பூர்

விளம்பர பலகைகள் அகற்ற ஆட்சியர் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு..!

by Vignesh Perumal on | 2025-05-09 05:27 PM

Share:


விளம்பர பலகைகள் அகற்ற ஆட்சியர் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு..!

திருப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து சிக்னல் கம்பங்களில் முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. ஈ.பி.அ.சரவணன் அளித்த புகாரின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திரு. ஈ.பி.அ.சரவணன் தனது புகாரில், திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் சாலைகளின் நடுவிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் சட்டவிரோதமாக விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், திரு. ஈ.பி.அ.சரவணன் அளித்த புகாரை மேற்கோள் காட்டி, முறையான அனுமதி பெறாமல் சிக்னல் விளக்கு கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை பொது மக்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக அகற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


போக்குவரத்து சிக்னல் கம்பங்களில் விளம்பர பலகைகள் வைப்பது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி உத்தரவு, வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் விளம்பரங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் நகரில் இந்த உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment