| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

டிஎஸ்பி அலுவலகத்தில் பாஜக மனு..! எதுக்குன்னு தெரியுமா..?

by Vignesh Perumal on | 2025-05-09 05:08 PM

Share:


டிஎஸ்பி அலுவலகத்தில் பாஜக மனு..! எதுக்குன்னு தெரியுமா..?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தற்போது நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலையில், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்த அனுமதி கோரி பாரதிய ஜனதா கட்சியினர் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லுவிடம் மனு அளித்தனர்.

இன்று (09.05.2025) பெரியகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் சென்ற பாஜகவினர், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்த அனுமதி கோரி மனு அளித்தனர்.

அந்த மனுவில், "இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகவும், நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியும் பெரியகுளத்தில் ஒரு அமைதியான விழிப்புணர்வு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு, மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பாஜகவினரிடம் உறுதியளித்தார். மேலும், பேரணி நடத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கிடைத்தால், பெரியகுளம் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் ஒன்றிணைந்து பேரணி நடத்த வாய்ப்புள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment