| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு...!!

by Muthukamatchi on | 2025-05-09 02:27 PM

Share:


நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு...!!

வாடிப்பட்டி அருகே நடை பயிற்சி சென்ற  பெண்ணிடம் 6 செயின் பறிப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ராம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விஜயராணி (வயது 62). இவர் தினந்தோறும் அதி காலை  பாலதண்டாயுதபாணி கோயில் பிரிவு வரை நடை பயிற்சி சென்று வருவார். அது போல் நேற்று காலை 5.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். வாடிப்பட்டி நகர் புறச்சாளையில் பெருமாள்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தலைக்கவசம் அணிந்த 30, 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் அங்கு வந்து ஒருவர் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கொள்ள மற்றொருவர் கீழே இறங்கி வந்து விஜயராணி கழுத்தில் இருந்த 5 பவுன் உருண்டை தாலி செயின் ஒரு பவுன் பட்டை வடிவ செயின் இரண்டையும் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி சப் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நிருபர் பாலராகுல், வாடிப் பட்டி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment