| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

ஊடுருவல் முயற்சி முறியடிப்பு..! 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

by Vignesh Perumal on | 2025-05-09 11:41 AM

Share:


ஊடுருவல் முயற்சி முறியடிப்பு..! 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை (BSF) வீரர்கள் இன்று (09.05.2025) அதிகாலை ஊடுருவல் முயற்சியை முறியடித்து, 7 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

சம்பா சர்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்பட்டதை அடுத்து, BSF வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை BSF வீரர்கள் அடையாளம் கண்டு அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த ஊடுருவல் முயற்சி பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமீப காலமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவமும், எல்லை பாதுகாப்பு படையினரும் எல்லைப் பகுதியில் தொடர்ந்து விழிப்புடன் இருந்து வருகின்றனர். இந்த துரித நடவடிக்கையின் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment