| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பள்ளி சிறுமி பாலியல்..! தலைமையாசிரியருக்கு 30 ஆண்டு சிறை...!

by Vignesh Perumal on | 2025-05-09 10:37 AM

Share:


பள்ளி சிறுமி பாலியல்..! தலைமையாசிரியருக்கு 30 ஆண்டு சிறை...!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது பள்ளி சிறுமிகளுக்கு கடந்த 2023-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்து மிரட்டிய வழக்கில், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் முருகன் (வயது 54) என்பவருக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று (09.05.2025) அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு, தலைமை ஆசிரியர் முருகன் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து மிரட்டியதாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று இவ்வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்ற நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் முருகனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பள்ளி சிறுமிகளுக்கு எதிரான இந்த கொடிய குற்றத்திற்கு போக்சோ நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த கடுமையான தண்டனை, குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.


மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் இந்த தீர்ப்பு ஒரு நீதியான முடிவாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment