| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

ட்ரோன் தாக்குதல்..! ரயில் சேவையில் பாதிப்பு...! ரயில்கள் ரத்து...! எங்கெல்லாம் தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-05-09 10:22 AM

Share:


ட்ரோன் தாக்குதல்..! ரயில் சேவையில் பாதிப்பு...! ரயில்கள் ரத்து...! எங்கெல்லாம் தெரியுமா...?

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், எல்லைப் பகுதியில் நிகழ்ந்த ட்ரோன் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராஜஸ்தான் வழியாக செல்லும் 4 பயணிகள் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 2 ரயில்களின் புறப்படும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், பகத் கி கோத்தி - பார்மர் (BME), பார்மர் - பகத் கி கோத்தி (BME), முனாபாவ் - பார்மர் (BME) மற்றும் பார்மர் - முனாபாவ் (BME) ஆகிய பயணிகள் ரயில்கள் இன்று (09.05.2025) முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஜோத்பூரில் இருந்து புறப்படும் ஜோத்பூர் - தாதர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜோத்பூர் - வாரணாசி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 8.25 மணிக்கு ஜோத்பூரில் இருந்து புறப்படும் ஜோத்பூர் - தாதர் எக்ஸ்பிரஸ், இன்று காலை 11.25 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த ரயில் சேவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரத்து செய்யப்பட்ட மற்றும் தாமதமாக இயங்கும் ரயில்களின் பயணிகள் தங்களது பயணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலும், ரயில் சேவை தொடர்பான புதிய தகவல்களுக்கு ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் உதவி எண்களை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றங்களால் பயணிகள் அடைந்துள்ள சிரமத்திற்கு ரயில்வே நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment