| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

அம்மனை காணத் திரண்ட பக்தர்கள்...! நகர் முழுவதும் மக்கள் வெள்ளம்...!

by Vignesh Perumal on | 2025-05-09 10:12 AM

Share:


அம்மனை காணத் திரண்ட பக்தர்கள்...! நகர் முழுவதும் மக்கள் வெள்ளம்...!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (09.05.2025) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை அம்மன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.

காலை 6 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேர் மாசி வீதிகள் வழியாக ஆடி அசைந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

தேரோட்டத்தில் விநாயகர், முருகன் மற்றும் நாயன்மார்களின் சப்பரங்களும் முன்செல்கின்றன. பக்தர்கள் தேரின் இருபுறமும் நின்று கோஷங்கள் எழுப்பியும், கற்பூர ஆரத்தி எடுத்தும் தங்களது பக்தி உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் எந்தவித அசம்பாவிதமும் இன்றி தேரோட்டத்தை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று (08.05.2025) வெகு விமரிசையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாளை (10.05.2025) தீர்த்த பூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற உள்ளது. இன்று நடைபெறும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment