by Vignesh Perumal on | 2025-05-09 09:59 AM
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நாளை (மே 9) சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை நாளை மாலை 5 மணிக்கு இப்பேரணி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில், இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கு இந்த பேரணி ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். "தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்காகவும், எல்லைப் பகுதிகளில் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இதில் கலந்து கொண்டு ராணுவத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!