| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

மின் தடை..! மின் ஊழியர்களுக்கு பாராட்டு..!

by Vignesh Perumal on | 2025-05-09 07:29 AM

Share:


மின் தடை..! மின் ஊழியர்களுக்கு பாராட்டு..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் மேல்மலைப் பகுதியில் உள்ள கூக்கால் பிரிவில் மின்வயர்களில் மரங்கள் விழுந்ததன் காரணமாக இன்று மதியம் முதல் மின்சாரம் தடைபட்டிருந்தது. இதனால் மேல்மலைப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில், நமது ஊர்களில் மின்சாரப் பணியில் ஈடுபட்டு வரும் உள்ளூர் மின்பணியாளர்கள் சிலர் உடனடியாக களத்தில் இறங்கி துரிதமாக செயல்பட்டனர். அவர்கள் மின்வயர்களில் விழுந்த மரங்களை விரைவாக வெட்டி அகற்றினர். இதன் விளைவாக, மேல்மலைப் பகுதி மக்களுக்கு தக்க சமயத்தில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, மேல்மலைப் பகுதி மக்கள் சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. "எங்கள் சார்பாகவும், நமது மேல்மலை பொது மக்கள் சார்பாகவும், தக்க நேரத்தில் வந்து மின்சாரத்தை வழங்கிய மின் ஊழியர்களுக்கு நன்றி! நன்றி! என எங்கள் நன்றி கலந்த வணக்கத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அப்பகுதி மக்கள் உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்தனர்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, உடனடியாக மின் தடையை சரிசெய்து மக்களுக்கு உதவிய உள்ளூர் மின் பணியாளர்களின் சேவைக்கு மேல்மலை மக்கள் அனைவரும் மனதார நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களின் இந்த செயல் பாராட்டுக்குரியது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment