| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

பள்ளி செல்லாத..! 280 குழந்தைகள்...! கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை...!

by Vignesh Perumal on | 2025-05-08 05:15 PM

Share:


பள்ளி செல்லாத..! 280 குழந்தைகள்...! கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை...!

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனைப்படி, பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியின் மூலம், மாவட்டம் முழுவதும் பல்வேறு காரணங்களால் 6 முதல் 14 வயது வரை உள்ள 280 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்தக் குழந்தைகளை வரும் கல்வியாண்டில் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்டம் முழுவதும் தீவிர கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி ஒன்றியம் கொடுவிலார்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த கணக்கெடுப்புப் பணியை உதவித் திட்ட அலுவலர் மோகன் நேரில் பார்வையிட்டார். அப்போது, பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை கேட்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இந்த கணக்கெடுப்புப் பணியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம், ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டிச்செல்வி, தமிழ்ச்செல்வன் மற்றும் ரெங்கலட்சுமி ஆகியோர் முனைப்புடன் ஈடுபட்டனர்.

குறிப்பாக, கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரங்கராஜன், இப்பணியில் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவர் ஆசிரியர் குழுவினருடன் இணைந்து, கண்டறியப்பட்ட குழந்தைகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று, பெற்றோர்களிடம் பள்ளியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் பணியில் உறுதுணையாக இருந்து வருகிறார்.


இந்த தொடர் முயற்சியின் மூலம், தேனி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள அனைத்து பள்ளி செல்லா குழந்தைகளையும் வரும் கல்வியாண்டில் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment