by Vignesh Perumal on | 2025-05-08 04:29 PM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவம் குறித்த காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடைக்கானல் அனந்தகிரி முதல் தெருவைச் சேர்ந்த காதர் மைதீன் மகன் சகுபர் சாதிக் என்பவர், தனது TN-63-AH-2277 இனோவா காரில் ஐந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கடந்த 06.05.2025 அன்று மேல்மலை சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில், பூம்பாறையிலிருந்து கொடைக்கானல் வரும்போது குண்டாறு பாலம் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் தாங்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையின் குறுக்கே நடுரோட்டில் நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் சகுபர் சாதிக்கை கையால் தாக்கியுள்ளனர். மேலும், அவரது காரின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பின்னர், அவர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து சகுபர் சாதிக் அவர்கள் 06.05.2025 அன்று கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மனு ரசீது வழங்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், அந்த மூன்று நபர்களும் மது அருந்தியிருந்ததுடன், ஒரு வாகனத்தை சேதப்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சில தொலைக்காட்சி செய்தி ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில், கஞ்சா போதையில் இருந்த நபர்கள் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியதாகவும், சுற்றுலாப் பயணிகளின் 18 வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் மிகைப்படுத்தி உண்மைக்கு மாறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி சம்பவத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்காகவும், பொதுமக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்காகவும் இந்த விளக்க அறிக்கை வெளியிடப்படுகிறது.
ஆகவே, இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!