| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம்...! அதிகாரிகள் எச்சரிக்கை...!

by Vignesh Perumal on | 2025-05-08 04:16 PM

Share:


ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம்...! அதிகாரிகள் எச்சரிக்கை...!

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தை முன்னிட்டு, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. நீர்வளத்துறை அரசாணை எண். 226, நாள் 07.05.2025-இன் படி, வைகை அணையில் இருந்து மே 8, 2025 முதல் மே 12, 2025 வரை மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இதன் முதற்கட்டமாக, இன்று (மே 8, 2025) மாலை 06:00 மணி முதல் வைகை அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் திறப்பானது, மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழாவில் அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக ஆற்றுப்படுகையை நனைப்பதன் மூலம் அப்பகுதியில் உள்ள கிணறுகளின் நீர் ஆதாரத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது. மேலும், வைகை குடிநீர் திட்டத்திற்கும் இது உதவும்.

திறக்கப்படும் இந்த தண்ணீரானது தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களைக் கடந்து செல்லும். எனவே, இந்த மூன்று மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ அல்லது குளிக்கவோ செல்ல வேண்டாம் என நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment